உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபிராமி அம்மன் கோயில் உண்டியலில் ரூ.3.92 லட்சம் வசூல்

அபிராமி அம்மன் கோயில் உண்டியலில் ரூ.3.92 லட்சம் வசூல்

திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 3 லட்சத்து 92 ஆயிரம் வசூலாகியிருந்தது.திண்டுக்கல் அபிராபி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. உதவி ஆணையர் ரமேஷ், ஆய்வாளர் கணேஷ், செயல் அலுவலர் அறிவழகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர். பொது உண்டியலில் ரூ. 2 லட்சத்து 93 ஆயிரத்து 482 ம், அபிராமி அம்மன் தங்க கவச உண்டியலில் ரூ. 99 ஆயிரத்து 786 ம் இருந்தது. பழைய கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ஒரு ஆண்டிற்கான காணிக்கை வசூல் பணம் இது என்று கூறிய அறநிலைய துறையினர், காசியா பிள்ளை பேட்டையில் தற்போதுள்ள கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல் பணம் அடுத்த ஆண்டு எண்ணப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !