கச்சபேஸ்வரர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்!
ADDED :4874 days ago
காஞ்சிபுரம்: கச்சபேஸ்வரர் கோவிலில், புஷ்ப பல்லக்கு உற்சவம் கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், சித்திரை உத்திரப் பெருவிழா, கடந்த மாதம் 18ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, கச்சபேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. அதை தொடர்ந்து, இரவு 8:45 மணிக்கு, கச்சபேஸ்வரர் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளை வலம் வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.