உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் வரும் 10ம் தேதி கிருத்திகை விழா

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் வரும் 10ம் தேதி கிருத்திகை விழா

திருப்போரூர்: கந்தசுவாமி கோவிலில், சித்திரை கிருத்திகை விழா, வரும் 10ம் தேதி, நடைபெற உள்ளது.திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், சித்திரை கார்த்திதை விழாவையொட்டி, வரும் 10ம் தேதி காலை 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்படும். மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, உற்சவர், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் கோட்டம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பக்தர்கள், கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்து, பாதுகாப்பாக சுவாமியை தரிசனம் செய்யவேண்டும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !