உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுமாரியம்மன் தேரில் கலசம்: வீரபாண்டியில் சிறப்பு பூஜை!

கவுமாரியம்மன் தேரில் கலசம்: வீரபாண்டியில் சிறப்பு பூஜை!

தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் தேரில், சிறப்பு பூஜைகள் நடத்தி நேற்று காலை கலசம் பொருத்தப்பட்டது.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழா இன்று காலை தொடங்குகிறது. தொடர்ந்து ஒரு வாரம் நடக்கும் விழாவில், அம்மன் நான்கு நாட்கள் தேரில் வலம் வருகிறார். இதற்காக நேற்று காலை தேர் தயார் செய்யப்பட்டு, காலை 9 மணி முதல் 10.25 மணி வரை, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கலசம் பொருத்தப்பட்டது. 15 கிலோ வரை எடை கொண்ட ஐம்பொன்னால் ஆன கலசம் திருவிழா நேரங்களில் மட்டும் தேரில் பொருத்தப்படும். மற்ற நாட்களில் கோயில் பொக்கிஷ அறையில் வைத்து பாதுகாக்கப்படும். பக்தர்கள் திருவிழா நேரத்தில் கூட்டம் அதிகம் இருப்பதால், அங்கபிரதட்சணம் செய்வதை தவிர்க்க வேண்டும். மாவிளக்கு எடுக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே எடுக்க வேண்டும் ,என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !