உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை பெய்ய வேண்டி கழுதைக்கு திருமணம்!

மழை பெய்ய வேண்டி கழுதைக்கு திருமணம்!

திருச்செங்கோடு: மழை வேண்டி, திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தம் கிராமத்தில், கழுதைகளுக்கு திருமணம் நடந்தது.தமிழகம் முழுவதும் மழை இல்லாததால், கடும் வறட்சி நிலவி வருகிறது. அதன் எதிரொலியாக, விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளான மக்கள், மழை வேண்டி, பல்வேறு பூஜை செய்து வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த கோழிக்கால்நத்தம் கிராமத்தில், மழை வேண்டி, கழுதைகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி, நேற்று, கோழிக்கால்நத்தம் கிராமத்தில், கழுதைகளுக்கு திருமணம் நடந்தது.இந்த திருமணத்துக்கு அழைப்பிதழ் அச்சிடப்பட்டு, அழைப்பு விடுத்து, பந்தல் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, மணமகன், மணமகள் அழைப்பு நடத்தி, புரோகிதர் மந்திரம் முழங்க திருமணம் நடந்தது.இந்த விநோத திருமணத்தை ஒட்டி, விருந்து நிகழ்ச்சி, மொய் எழுதுதல் உள்ளிட்ட அனைத்து சடங்குகளும் நடந்தது. திருமணத்தை, கோழிக்கால்நத்தம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !