உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னிபுரீஸ்வரர் கோவில் பராமரிப்பில் அலட்சியம்: பக்தர்கள் வேதனை!

அக்னிபுரீஸ்வரர் கோவில் பராமரிப்பில் அலட்சியம்: பக்தர்கள் வேதனை!

திருக்கழுக்குன்றம்: வழுவதூர், அக்னிபுரீஸ்வரர் கோவில், போதிய பராமரிப்பின்றி சீரழிந்து வருவதால், புனரமைத்து, பூஜை நடத்த வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருக்கழுக்குன்றம் அடுத்த வழுவதூர் கிராமத்தில், பழமை வாய்ந்த அக்னிபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதற்கான சான்று, கோவில் கருவறையின் பின்புற சுவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.சிறப்புகோவிலின் நுழைவு வாயில் "பா வடிவில் உள்ளது. மூலவர் அக்னிபுரீஸ்வரர், கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். எதிரே, நந்தி மண்டபம் உள்ளது. இடது புறத்தில், அம்மன் சன்னிதியும், கோவிலை ஒட்டி திருக்குளமும் அமைந்துள்ளன. இங்கு, சிவராத்திரி, பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடந்து வந்தன. இந்நிலையில், கடந்த, 40 ஆண்டுகளாக, கோவில் போதிய பராமரிப்பு மற்றும் பூஜைகள் இன்றி உள்ளது. கோபுரம் மற்றும் நந்தி மண்டபத்தின் மீது செடிகள் வளர்ந்து, கட்டுமானத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சிதிலமடைந்து வரும் இக்கோவிலை, அறநிலையத் துறை அதிகாரிகள், புனரமைத்து, பூஜை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அலட்சியம் இதுகுறித்து, அப்பகுதி பக்தர் ஒருவர் கூறுகையில், ""அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய் உள்ள கோவில்களை மட்டும் தான் சீரமைத்து, பராமரிக்கின்றனர். வருமானம் இல்லாத, இதுபோன்ற பழமையான கோவில்களை கண்டுகொள்வதில்லை. இக்கோவிலை சீரமைத்து, பூஜை நடத்த அரசு முன்வர வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !