அர்ஜுனன் தவ நிலை: பக்தர்கள் தரிசனம்
ADDED :4506 days ago
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் கோகுலம் வீதியில் உள்ள, திரவுபதியம்மன் கோவிலில், அர்ஜுனன் தவ நிலை நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.சின்ன காஞ்சிபுரம் கோகுலம் வீதியில் உள்ள திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்னி வசந்த பெருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு கடந்த 14ம்தேதி அக்னி வசந்த பெருவிழா கோலாகலமாக துவங்கியது.விழாவையொட்டி, நாள்தோறும் பல்வேறு தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவு நடந்தது. நேற்று 22ம்நாள் உற்சவத்தையொட்டி அர்ஜுனன் தவநிலை விழா நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில், பவானி அம்மன் நாடக மன்ற கலைஞர் ஒருவர், அர்ஜுனன் தவநிலை வேடம் பூண்டு, 108 அடி பனை மரத்தின் மீது தவம் செய்தார். இந்த பனைமரத்தின் கீழ் திருமணமாகாத பெண்கள், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் பக்தி பரவசத்துடன் வேண்டிச் சென்றனர்.