வன்னியப் பெருமாள் தேரில் மாட வீதியுலா
ADDED :4506 days ago
புதுச்சேரி: வன்னியப் பெருமாள் கோவிலில் நேற்று திருத்தேர் உற்சவம் நடந்தது.முதலியார்பேட்டை வன்னியப் பெருமாள் கோவிலில் கடந்த 27ம் தேதி பிரம்மோற்சவம் துவங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. கடந்த 4ம் தேதி இரவு 9.30 மணிக்கு வன்னியப் பெருமாள்-அலர்மேல் மங்கை திருக்கல்யாண உற்சவம், நேற்று முன் தினம் பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது.நேற்று காலை 9.00 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ., வடம் பிடித்து துவக்கி வைத்தார். மாட வீதியுலாவில் திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாளை (8 ம்தேதி) ஊஞ்சல் உற்வசத்துடன் விழா நிறைவு பெறுகிறது.