ஆண்டார்குப்பம் முருகன் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம்
ஆண்டார்குப்பம்: ஆண்டார்குப்பம் முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.பொன்னேரி, அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில், பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை திங்களில், பிரம்மோற்சவ விழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா, நேற்று காலை, 5:00 மணிக்கு, கொடியேற்றத் துடன் துவங்கியது.இம்மாதம், 9ம் தேதி, பரணி இரவு நாக வாகனக் காட்சியும் மற்றும் 15ம் தேதி காலை, தீர்த்தவாரி நடைபெறும். பெரும்பேடுபொன்னேரி அடுத்த, பெரும்பேடு கிராமத்தில், முத்துகுமாரசுவாமி கோவில், சித்திரை கிருத்திகை திருவிழா இம்மாதம், 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாள் (9ம் தேதி) பரணி அன்று இரவு பெரும்பேடு, பேட்டை, சத்திரம், மடிமைகண்டிகை உள்ளிட்ட, 12 கிராம மக்கள், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும்,அடுத்த நாள் (10ம் தேதி), காலை பால்குட அபிஷேகமும், இரவு முருகன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.