சமயபுரத்து மாரியம்மன் கண் திறப்பு?:ப.பாளையத்தில் பரபரப்பு
ADDED :4573 days ago
பள்ளிபாளையம்: சமயபுரத்து மாரியம்மன் கண் திறந்து மூடியதாக பரவிய தகவலால், பள்ளிபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.பள்ளிபாளையம் வ.உ.சி., நகரில், சமயபுரத்து மாரியம்மன் கோவில் உள்ளது. சில தினங்களுக்கு முன், கோவில் திருவிழா நடந்து முடிந்தது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில், பந்தல் அமைக்கப்பட்டது. அந்த பந்தலில், நேற்று இரவு, 7 மணியளவில், அஙகுள்ள குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.அப்போது, ஸ்வாமி கண் திறந்து மூடியது போல் இருந்துள்ளது. அதை குழந்தைகள் சிலர் பார்த்துள்ளனர். அதுகுறித்து, பெற்றோர்களிடம், குழந்தைகள் கூறியுள்ளனர். அதையடுத்து, அப்பகுதி மக்கள், ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.