குப்பீஸ்வரர் கோவிலில் உயரமான சிலை
ADDED :4646 days ago
குன்னூர்: குன்னூர் வண்ணாரப்பேட்டை குப்பீஸ்வரர் கோவிலில், 36 அடி மகாவாள் முனீஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது.குன்னூர் வண்ணாரப்பேட்டை குப்பீஸ்வரர் கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் ஆகம விதிகள் படி, கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், மூன்று நிலைகள் கொண்ட கோபுரம் ஆகியவை புனரமைப்பட்டுள்ளன. இங்கு மாவட்டத்தில் உயரமான 36 அடி மகாவாள் முனீஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மஹா கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.