தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலையில் நந்திக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி உள் பிரகாரத்தில் வலம் வந்தார். இதனைத்தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.அதுபோல் தென்காசி குலசேகரநாதர் கோயில், சிதம்பரேஸ்வரன் கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில் உட்பட பல்வேறு சிவன் கோயில்களிலும் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடந்தது.800வது திருவாசகம் முற்றோதுதல்தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் தென்காசி சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் சார்பில் நேற்று மாலை 800வது திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.