ஆதிசங்கரர் 1224வது ஜெயந்தி விழா 10ம் தேதி துவக்கம்
திருநெல்வேலி: தியாகராஜநகர் ஆஸ்தீக சமாஜத்தில் ஆதி சங்கரரின் 1224வது ஜெயந்தி மஹோத்ஸவம் வரும் (10ம் தேதி) துவங்குகிறது.பாளை., தியாகராஜநகர் ஆஸ்தீக சமாஜத்தில் ஆதி சங்கர பகவத் பாதாளின் 1224வது ஜெயந்தி மஹோத்ஸவம் வரும் 10ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. அன்று காலையில் கணபதி ஹோமம், ஜபம், அபிஷேகம், பூஜை, வேத பாராயணங்கள், உபநிஷத் பாராயணம், 11ம் தேதி காலையில் ஜபம், அபிஷேகம், பூஜை, வேத பாராயணங்களும், மாலையில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், உபநிஷத் பாராயணம் நடக்கிறது. 12ம் தேதி காலையில் ஜபம், அபிஷேகம், பூஜை, உபநிஷத் பாராயணமும், இதே போல் 13, 14ம் தேதிகளில் சிறப்பு பூஜையும் நடக்கிறது. 15ம் தேதி காலை 7 மணிக்கு சங்கர ஜெயந்தி ஜபம், அபிஷேகம் பூஜை, ருத்ர ஏகாதசினி பூஜையும், மாலையில் ஆதிசங்கர பகவத் பாதாளின் திருவுருவ படம் நகர் வலமும் நடக்கிறது.சமஷ்டி உபநயனத்தை முன்னிட்டு 11ம் தேதி மாலை 6 மணிக்கு உதகசாந்தி ஜெபமும், காப்புக்காட்டு வைபமும், 12ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் சமஸ் டி உபநயனமும் ஆஸ்தீக சமாஜத்தில் நடக்கிறது.