உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேரை புதுப்பிக்க கோரிக்கை

பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேரை புதுப்பிக்க கோரிக்கை

உத்திரமெரூர்: பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேரை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது பெருநகர் கிராமம். இங்கு சோழர்கள் மற்றும் விஜய நகர மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற, பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கொவில் கொபுரம் காற்று வழங்க ஒரு நிலையாகவும், மழை - சூரிய ஒளி - சந்திரன் - நட்சத்திர கூட்டங்களின் ஒளியை பெற என, ஐந்து நிலைகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான பெரிய தேர் உள்ளது. நான்கு சக்கரங்கள் கொண்ட இது, 32 அடி உயரமுடையது. ஐந்து நிலைகளை கொண்ட பழமையான இந்த தேர், ஐந்து ஆண்டிற்கு முன் பழுதடைந்தது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக, தை மாதம் பிரம்மோற்சவத்தின் போது, ஏழாம் நாள் விழாவில், தேரோட்டம் நடைபெறுவதில்லை. தேரை பழுது பார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வர, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். துகுறித்து, கோவில் செயல் அலுவலர் வேலரசு கூறுகையில், ""பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் தேரை பழுது பார்க்க, இந்து அறநிலையத் துறை ஆணையர் பொது நல நிதியில் இருந்து, ஒன்பது லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், பணி துவங்க உள்ளது. முதற்கட்டமாக தேரின் பழுதடைந்த பாகம், பிரித்தெடுக்கும் பணி துவங்கியுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !