உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் வரதர் கோவிலில் மேற்கூரை அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம் வரதர் கோவிலில் மேற்கூரை அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், கோடை வெயிலை சமாளிக்க, தற்காலிக மேற்கூரை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரி உள்ளனர்.சின்ன காஞ்சிபுரத்தில், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் மேற்கு ராஜகோபுரத்தில் இருந்து, முகப்பு மண்டபம் வரையில் வெட்ட வெளியாக உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், கோவில் முகப்பில் இருந்து, பிரதான மண்டபம் வரை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் வெப்பத்தால் அவதிப்படுகின்றனர். இருப்பினும், கோவில் நிர்வாகம் சார்பில், மேற்கு கோபுரத்தில் இருந்து, முகப்பு மண்டபம் வரையில் ரப்பர் தரை விரிப்பான் (மேட்) போடப்பட்டுள்ளது.இந்த தரை விரிப்பான்கள், உச்சி வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இருப்பினும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கால்களில் சூடு தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, மேற்கு கோபுரத்தில் இருந்து, பிரதான மண்டபம் வரையில், மேற்கூரை அமைக்க கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !