குருபெயர்ச்சி ஆலோசனை
ADDED :4575 days ago
குருவித்துறை:சோழவந்தான் குருவித்துறை குருபகவான் கோயிலில் மே 28ல் குருபெயர்ச்சி விழா நடப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பன்னீர், கோயில் தக்கார் செல்வி முன்னிலை வகித்தனர். நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள் கூறுகையில், ""மே 28 இரவு 9.18 மணிக்கு, ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குருபகவான் இடபெயர்ச்சியாகிறார். முன்னதாக மே 26 முதல் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகார பூஜையாக "லட்சார்ச்சனை நடக்கிறது. லட்சார்ச்சனைக்கு ரூ.300 செலுத்தியவர்களுக்கு குருபகவான் படமுள்ள 2 கிராம் வெள்ளி டாலர், பிரசாதமும், ரூ.100 செலுத்தியவர்களுக்கு பிரசாதம் மட்டும் வழங்கப்படும், என்றார்.