திருநள்ளாரில் விநாயகர் உற்சவம்!
ADDED :4575 days ago
காரைக்கால்:திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோயில் பிரமோற்சவ விழாவில் விநாயகர் உற்சவம் நடந்தது. காரைக்கால் திருநள்ளாரில் உலகப் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 1ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 2ம் தேதி மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் முடிந்து தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை முடிந்து நேற்று முன்தினம் கொடியேற்றம் நடந்தது. நேற்று காலை, இரவு விநாயகர் வீதியுலா நடந்தது. கோயில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி, தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.