உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

சவுடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

சேலம்: மேட்டூர், வனவாசியில் உள்ள தேவாங்க குல ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா, இன்று துவங்குகிறது.வனவாசி, தேவாங்க குல ராமலிங்க கோயில் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 15ம் தேதி அதிகாலை, விக்னேஷ்வர பூஜை, கோ, அஸ்வ, கஜ பூஜை, கணபதி ஹோமம் நடக்கிறது. அன்று காலை, 9 மணிக்கு வீரகுமாரர்கள், வீரமுட்டி அலகு சேவையுடன், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர், அன்தானம், மஹா தளிகை பூஜை நடக்கிறது. வரும், 16ம் தேதி ஸ்ரீ சாமுண்டி அழைப்பும், அன்னதானமும் நடக்கிறது. வரும், 17ம் தேதி, திருமஞ்ஜனம், பானக ஊர்வலம், திருவிளக்கு பூஜை, மஹா ஜோதி புறப்பாடு நடக்கிறது. வரும், 18ம் தேதி மஞ்சள் நீர் ஊர்வலத்துடன், விழா நிறைவு பெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை, ஊர் செட்டிமைக்காரர்கள், விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !