பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழா 16ம் தேதி துவக்கம்
ADDED :4576 days ago
கடலூர்:கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழா வரும் 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இதனையொட்டி கடந்த 8ம் தேதி எல்லைக் கட்டுதல், 9ம் தேதி காப்புக் கட்டுதல் உற்சவம் நடந்தது. வரும் 16ம் தேதி காலை 7:45 மணி முதல் 8:45 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. தினமும் இரவு வீதியுலாநடக்கிறது. 20ம் தேதி காலை அதிகாரநந்தி கோபுர தரிசனம், இரவு 10:00 மணிக்கு தெருவடைச்சான், 22ம் தேதி இரவு திருக்கல்யாணம் பரிவேட்டை நடக்கிறது.தொடர்ந்து 24ம் தேதி காலை 8:15 மணி முதல் 9:15 மணி வரை தேர் வடம் பிடித்தல், 27ம் தேதி காலை திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீகம் நிகழ்ச்சி, இரவு திருஞான சம்பந்தர் திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது. விழாக் காலங்களில் வேதபாராயணம், தேவாரம், நாதஸ்வரம் மற்றும் இன்னிசை கச்சேரி நடக்கிறது.