ஸ்ரீபெரும்புதூர் கோவிலில் ராமானுஜர் அவதார உற்சவம்!
ADDED :4576 days ago
ஸ்ரீபெரும்புதூர்: ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், ராமானுஜர், குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், ராமானுஜர் அவதார உற்சவம், கடந்த 5ம் தேதி துவங்கியது. இதை முன்னிட்டு, தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், ராமானுஜர், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அமர்ந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று, குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். டில்லி மண்டபத்தில் ராமானுஜருக்கு சிறப்பு வழிபாடும், ஆராதனையும் நடைபெற்றது. 7ம் நாள் உற்சவமான இன்று காலை, ‹ரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும் ராமானுஜர் எழுந்து அருள்வார்.