கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 விளக்கு பூஜை!
ADDED :4576 days ago
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 13ஆம் ஆண்டு ஸம்வஸ்த்ரா அபிஷேகம் மற்றும் 4ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது. முதல் நாள் விசேஷ அபிஷேத்துடன், செல்லியம்மன் பூங்கரக ஊர்வலம் இரவு சாமி வீதி உலா நடந்தது. 5ம் தேதி காலை 8 மணிக்கு அம்மச்சார் அம்மன் கோவிலில் கலச பூஜை, விசேஷ அர்ச்சனை செய்தனர். அம்மச்சார் அம்மன் கோவிலில் இருந்து 1008 பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்று பால் அபிஷேகம் செய்தனர். 10ம் தேதி இரவு அம்மச்சார் அம்மன் கோவிலில் 1008 விளக்குகளை வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சகஸ்ர நாம அர்ச்சனை, லலிதா திரிசதி அர்ச்சனை, அஷ்டோத்ர சதநாமா வலி, மகா தீபாராதனை நடந்தது.