உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 81 அடி உயர தில்லைவனக் காளியம்மனுக்கு கும்பாபிஷேகம்!

81 அடி உயர தில்லைவனக் காளியம்மனுக்கு கும்பாபிஷேகம்!

முதுநகர்: கடலூர் துறைமுகம், சுத்துக்குளம் கிராமத்தில் 81 அடி உயர ஸ்ரீ தில்லைவனக் காளியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.கடலூர் துறைமுகம், சுத்துக்குளம் கிராமத்தில் 81 அடி உயர ஸ்ரீ தில்லைவனக் காளியம்மனுக்கு மகா கும்பாபிஷேக விழா கடந்த 9ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 10ம் தேதி மகாலட்சுமி ஹோமம், முதல் கால பூஜையும், 11ம் தேதி 2 மற்றும் 3ம் கால பூஜையும் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு 4ம் கால பூஜை தொடங்கி விசேஷ ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 81 அடி உயர ஸ்ரீ தில்லைவனக் காளியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.அதனைத் தொடர்ந்து, 10:00 மணிக்கு அதர்வன ப்ரத்தியங்கிரா தேவி, திருநீலக்கண்டேஸ்வரர், சூலினி துர்கை, செல்வகணபதி, செல்வமுத்துக் குமாரசுவாமி, ஆஞ்சநேயர், தட்சணாமூர்த்தி, யோகசனீஸ்வரர், நவகிரஹம், ஆதி விநாயகர் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !