நெல்லையப்பர் கோயிலில் சமய பண்பாட்டு பயிற்சி நிறைவு
ADDED :4575 days ago
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் பக்தர் பேரவை சார்பில் சமய பண்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.நெல்லையப்பர் கோயிலில் கடந்த 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை இந்து சமய பண்பாட்டு வகுப்பு காந்திமதி அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் நடந்தது. பயிற்சியில் ஆன்மிகம் கதைகள், ஆன்மிக தகவல்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. சமய பயிற்சி வகுப்பின் போது அவ்வப்போது கேள்விகள் கேட்கப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அமைப்பாளர் ராஜகோபால் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.