உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் மா விளக்கு ஊர்வலம்

மாரியம்மன் கோவிலில் மா விளக்கு ஊர்வலம்

தர்மபுரி: தர்மபுரியை அடுத்த அன்னசாகரம் சக்தி மாரியம்மன் கோவில் விழாவையொட்டி பக்தர்கள் மா விளக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதையொட்டி, கடந்த, 7ம் தேதி சக்தி மாரியம்மனை கங்கைக்கு அனுப்பும் நிகழ்ச்சியும், 13ம் தேதி காலை 10 மணிக்கு பால்குட ஊர்வலமும், 14ம் தேதி மாலை அம்மனுக்கு பக்தர்கள் கூழ் படைத்தலும், மாலை, 6 மணிக்கு கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.நேற்று முன்தினம் காலை, 10 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலாவும், மாலை, 3 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. நகராட்சி துணை தலைவர் ஆறுமுகம், திருநாவுக்கரசு, சீனிவாசன், பலராம், காசிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !