நீலமங்கலம் கோவிலில் 108 கலசாபிஷேகம்
ADDED :4551 days ago
கள்ளக்குறிச்சி:நீலமங்கலம் சிவன் கோவிலில் 108 கலசாபிஷேகம் நாளை நடக்கிறது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நாளை 19ம் தேதி காஞ்சி மாமுனிகள் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் அவதார தினத்தை முன்னிட்டு 108 கலசாபிஷேகம் நடத்தப்படுகிறது.அதிகாலை சிவன், அம்மன், விநாயகர், வள்ளி, தெய்வானை, முருகன், நவக்கிரகங்கள் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்தி தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பிற்பகல் 1 மணிக்கு கலசாபிஷேகமும் நடக்கிறது.சங்கரா கலை அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் வைபவத்தை நடத்தி வைக்கின்றனர்.