உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்பிரமணிய சுவாமிகேடயத்தில் வீதி உலா

சுப்பிரமணிய சுவாமிகேடயத்தில் வீதி உலா

ஸ்ரீபெரும்புதூர்:சுப்பிரமணிய சுவாமி, வைகாசி விசாக பெருவிழாவில், கேடயத்தில் எழுந்தருளினார்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாக பெருவிழா, கடந்த 15ம் தேதி காலை 5:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு, சுப்பிரமணிய சுவாமி புலி வாகனத்திலும், 16ம் தேதி காலை, சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும் வீதி உலா வந்தார்.அதை தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி கேடயத்தில் எழுந்தருளினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். இன்று மாலை (18ம் தேதி), நாக வாகனத்தில் வீதி உலா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !