உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி பெருமாள் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

சிங்கம்புணரி பெருமாள் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

சிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் 10 நாள் வைகாசி விசாக திருவிழா நேற்று துவங்கியது.இதையொட்டி, சந்திவீரன் கூடத்திலிருந்து விநாயகர் ரதத்தில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தார். யாகசாலை பூஜை, தீபாராதனைகளுடன் பகல் 2 மணிக்கு கோயில் கம்பத்தில் கொடியேற்றம் நடந்தது. விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர். பூரணா, புஷ்கலா சமேத சேவுகப் பெருமாள் அய்யனார், பிடாரி அம்மன் தினமும், மண்டகப்படியில் எழுந்தருள்கின்றனர். பல்வேறு வாகனங்களில் இரவில் சுவாமி திரு வீதி உலா நடக்கிறது. மே 23 ல் சுவாமி திருக்கல்யாணம், 24 ல் சமணர் கழுவேற்றம், 27ல்,தேரோட்டம், 28ல் தீர்த்தவாரி, இரவு மலர் பல்லக்கு விழா, கலை, இசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. சிவகங்கை தேவஸ்தானம், சிங்கம்புணரி நாட்டார்கள் விழா ஏற்பாடுகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !