உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் 29ல் வாணவேடிக்கை

மாரியம்மன் கோவிலில் 29ல் வாணவேடிக்கை

கரூர்: மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, வரும், 29ம் தேதி வாணவேடிக்கை நடக்கிறது. கரூர் ஸ்ரீ மாரியம்மன் வாணவிழா டிரஸ்ட் நிர்வாகிகள் கூட்டம், தலைவர் கருப்பசாமி தலைமையில், அபிராமி ஹோட்டலில் நடந்தது. கூட்டத்தில், கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, வரும், 29ம் தேதி அமராவதி ஆற்றில் கம்பம் விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து அன்றிரவு, 7.30 மணிக்கு உப்பிடமங்கலம் பாஸ்கர், நாமக்கல் கிருஷ்ணமூர்த்தி, குஜிலியம்பாறை பாலாஜி ராமசாமி, காஞ்சிபுரம் நரேந்திர பயர் ஒர்க்ஸ், சிவகாசி நாயகி பயர் ஒர்க்ஸ் சார்பில், வண்ண மையமான வாணவேடிக்கை சிறப்பாக நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. டிரஸ்ட் செயலாளர்கள் பெரியசாமி, பக்தவச்சலம், துணைத்தலைவர் சுந்தர்ராஜ், துணை செயலாளர் முனியப்பன் உட்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !