உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டு பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் விழா

காட்டு பண்ணாரியம்மன் கோவிலில் குண்டம் விழா

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் இருந்து திம்பம் கொண்டை ஊசி வளைவு துவங்கும் இடத்தில் இருந்து கிழக்கே நான்கு கி.மீ., தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது பேளேரி என்று அழைக்கப்படும் காட்டு பண்ணாரி கோவில். இந்த கோவிலில் திம்பம் அடுத்துள்ள காளிதிம்பம் பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள் பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இப்பகுதியில் புலி, யானை மற்றும் காட்டெருமை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அதிகமாக நடமாடி வருவதால் இந்த கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இந்த கோவிலுக்கு தற்போது வாகனங்கள் அனுமதிப்பதில்லை. ஒவ்வொறு வாரமும் திங்கட்கிழமை இரவு ம ட்டும் இங்கு பூஜை நடப்பது வழக்கம். இந்த பூ ஜைக்காக காளிதிம்பத்தி ல் இருந்து பூசாரிகள் திங்கட்கிழமை மதியம் கோ விலுக்கு சென்று, செவ் வா ய்கிழமை காலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விடுவர். நேற்று முன்தினம் இரவு இந்த கோவிலுக்கு வானங்களை அனுமதிக் க வனத்துறை மறுத்துவி ட்டனர். மாற்று ஏற்பாடா க நான்கு வேன்க ளை ம ட்டும் ஆட்கள் ஏற்றிக்கெ õண்டு கோவிலில் வி ட்டுவர ஏற்பாடு செ ய்திருந்தனர். நேற்று கா லை நான்கு மணிக்கு கா ட்டு பண்ணாரி கோவிலில் குண்டம் விழா நடந்தது. பூசாரி பாலன் முதலில் குண்டம் இறங்கினார். இவருக்கு பின் பக்தர்கள் குண்டம் இறங்கி, தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். அடர்ந்த வனப்பகுதியில் கோவில் இருப்பதால் சத்தியமங்கலம் போலீஸார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !