மடுகரை கூத்தாண்டவர் கோவிலில்28ம் தேதி திருக்கல்யாண உற்சவம்
ADDED :4625 days ago
நெட்டப்பாக்கம்: மடுகரை கூத்தாண்டவர் திருக்கல்யாண உற்சவம் வரும் 28 ம்தேதி நடக்கிறது.மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் உள்ள கூத்தாண்டவர் கோவில் உற்சவ விழா நேற்று காலை 9.00 மணிக்கு துவங்கியது.இன்று (23ம் தேதி) பிடாரியம்மன், மாரியம்மன் சாகை வார்த்தல் நடக்கிறது. அதனை தொடர்ந்து 26ம் தேதி மதியம் 12.00 மணிக்கு சூரனுக்கு சோறு போடுதல், 28ம் தேதி கூத்தாண்டவர் திருக்கல்யாணம். 29ம் தேதி கூத்தாண்டவர் ரத உற்சவம் நடக்கிறது.31ம் தேதி மதியம் 12.00 மணிக்கு கூந்தல் முடித்தல், படுகளம் போடுதல், மாலை 5.00 மணிக்கு அக்னி மிதித்தல், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.ஏற்பாடுகளை மடுகரை கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.