காளஸ்தீஸ்வரர் கோவிலில் இன்று 108 சங்காபிஷேகம்
ADDED :4556 days ago
புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள காளஸ்தீஸ்வரர் கோவிலில், இன்று 108 சங்காபிஷேகம் நடக்கிறது.ஆயிர வைசிய சமூகத்திற்கு சொந்தமான இக்கோவிலில், இன்று (23ம் தேதி)108 சங்காபிஷேக விழா நடக்கிறது. அதையொட்டி, நேற்று மாலை விக்னேஸ்வர பூஜை, யாக பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இன்று காலை 7.30 மணிக்கு, யாக பூஜை மற்றும் தீபாராதனையும், காலை 9.30 மணிக்கு மேல் யாத்திராதானம் கலசம் புறப்பாடு, காளத்தீஸ்வர சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.