உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகமுத்து மாரியம்மன்கோவில் கும்பாபிஷேகம்

நாகமுத்து மாரியம்மன்கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சேரி: நைனார்மண்டபம், நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.நைனார்மண்டபம், கடலூர் சாலையில் நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 20ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன், யாகசாலை பூஜைகள் துவங்கியது. கும்பாபிஷேக தினமான நேற்று, காலை 10.00 மணிக்கு கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, 10.30 மணிக்கு பரிவார சுவாமிகள் கும்பாபிஷேகம், 10.45 மணிக்கு நாகமுத்து மாரியம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.இரவு 8.00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பாஸ்கர் எம்.எல்.ஏ., இந்து அறநிலையத் துறை இயக்குனர் மோகன்தாஸ், திருப்பணிக்குழு தலைவர் நடராஜன், பொருளாளர் பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !