முத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4620 days ago
வடமதுரை: காணப்பாடியில் ஒக்கலிகர் காப்பு கரவனவார் குல தெய்வங்களான ஸ்ரீ ஐந்துபந்தி முத்தம்மன், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள், சப்த கன்னிமார் அம்மன், பொம்மணன் கோயில் உள்ளது. இக்கோயில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் பத்ரகாளியம்மன் கோயில் நாகராஜ் குருக்கள் நடத்தி வைத்தார். கோயம்புத்தூர் ஸ்ரீ விஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி, பழனிச்சாமி எம்.எல்.ஏ., முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் கவிதா, மாநில ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் வெள்ளியங்கிரி, இளைஞரணி தலைவர் ஜோதிமணி, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.