உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவங்கியது

வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவங்கியது

காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நேற்று அதிகாலை, கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத, பிரம்மோற்சவ விழா, நேற்று காலை 3:40மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிவேட்டு முழங்க, கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. 4:00 மணிக்கு, வரதராஜ பெருமாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். மாலை 5:30 மணிக்கு, சிம்ம வாகன உற்சவமும், இரவு 1:30 மணிக்கு, இரண்டாம் காப்பும் நடந்தது. இரண்டாம் நாள் விழாவை முன்னிட்டு, இன்று காலை 4:00 மணிக்கு, ஹம்ச வாகனமும், மாலை 5:00 மணிக்கு, சூரிய பிரபை வாகனமும், நாளை, பிரபல உற்சவமான, கருட சேவை உற்சவமும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !