அங்காள பரமேஸ்வரி கோவில் தீமிதி உற்சவம் நாளை துவக்கம்
ADDED :4554 days ago
ஓபசமுத்திரம்: ஓபசமுத்திரம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், நாளை (மே 24) கொடிஏற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்குகிறது. கும்மிடிப்பூண்டி அடுத்த, சுண்ணாம்புக்குளம் அருகே, ஓபசமுத்திரம் கிராமத்தில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோவில். இக்கோவிலில், இந்த ஆண்டின் தீமிதி திருவிழா உற்சவம், நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவிழா நடைபெறும், 10 நாட்களும் அம்மன் திருவீதி உலா நடைபெறும். திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடு களையும், ஓபசமுத்திரம் கிராம மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.