உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் சிலையைப் பாதுகாத்தவர்

பெருமாள் சிலையைப் பாதுகாத்தவர்

அந்நியர் படையெடுப்பின் போது மதுரை அருகில்உள்ள யானைமலையில் ஸ்ரீரங்கம் உற்சவர் நம்பெருமாள் சிலை (வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் வழியே வருபவர்) பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டிருந்தது.  பிள்ளைலோகாச்சாரியார் என்ற மகான் பாதுகாப்பு பணிகளைச் செய்தார். அவர் இவ்வூரிலேயே உயிர் துறந்தார். அவருடைய நினைவிடம்(திருவரசு) இங்கு உள்ளது. யானைமலையின் அடிவாரத்திலுள்ள இவ்வூருக்கு கொடிக்குளம் என்று பெயர். வடமொழியில் இவ்வூரை ஜோதிஷ்குடி என்பர். இங்கு பிரம்மா வழிபட்ட வேதநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. நம்பெருமாள் சிலை இருந்த இடத்தில் அடையாளமாக ஒரு பாதம் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !