தேரில் பவனி வந்த ஸ்ரீவீரராகவப் பெருமாள்
ADDED :4553 days ago
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.மேயர் விசாலாட்சி, துணை மேயர் குணசேகரன், கலெக்டர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர், வடம் பிடித்து, தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பூமி நீளாதேவி தாயார், கனகவல்லி தாயாருடன் ஸ்ரீவீரராகவப் பெருமாள், சர்வ அலங்காரத்துடன் தேரில் வீற்றிருந்தார். மேள, தாளம் இசைக்க, வான வேடிக்கைகள் வர்ண ஜாலமிட, பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன், தேர் பவனி வந்தது.மாலை 6.50 மணிக்கு நிலையை வந்தடைந்ததும், பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அப்போது, ஐந்து நிமிடம் பெய்த தூறல் மழை, பக்தர்கள் மனதை குளிர்வித்தது.