திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாத பெருமாள் திருக்கல்யாண உற்சவம்
ADDED :4626 days ago
திட்டக்குடி: திட்டக்குடி வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாத பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. வைகாசி பிரமோற்சவ விழா கடந்த மே 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜை மற்றும் திருவீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் 22ம் தேதி காலை சூர்ணா அபிஷேகமும், தொடர்ந்து மோகினி அலங்காரத்தில் பெருமாள் திருவீதியுலாவும் நடந்தது. மாலை திருக்கல்யாண மஞ்சமும், தொடர்ந்து சுவாமி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. விழாவினை வைணவ செம்மல் வரதசிங்காச்சாரியார் தலைமையில் கோவில் பட்டாச்சாரியார்கள் முத்து கோவிந்தாச்சாரியார், ராகவன், சுதாகரன் நடத்தி வைத்தனர்.