உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி

பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் நேற்று குருப்பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் குருபகவானை தரிசனம் செய்தனர்.நேற்று ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தட்சிணாமூர்த்தி மூலவர் வெள்ளி அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உற்சவர் ஆலவிருட்சத்தின் கீழ் கார்த்திகைப் பெண்கள்,ரிஷிகள் சூழ பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் பக்தர்கள் திரளாக வந்து உற்சவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.தொடர்ந்து குருப்பெயர்ச்சி நடந்த பின்னர் இரவு 9.15 மணிக்கு கோபுரத்திற்கு தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது.ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர் ஆர்.வீரப்பச்செட்டியார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !