விழுப்புரம் சிவன் கோவிலில்தட்சணாமூர்த்திக்கு தங்க கவசம்
ADDED :4549 days ago
விழுப்புரம்: விழுப்புரம் சிவன் கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு தட்சணாமூர்த்தி சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. விழுப்புரம் கைலாசநாதர் சிவன் கோவிலில் குரு பெயர்ச்சி விழாவை யொட்டி நேற்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது. மூலவர் கோஸ்டத்தில் உள்ள தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு தங்க கவசம் அணிவித்து, மகா தீபாராதணை நடந்தது. முன்னதாக நவக்கிரக சன்னதியில் உள்ள குரு பகவானுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து, சிறப்பு தீபாராதணை நடந்தது.குரு பெயர்ச்சியை முன்னிட்டு, மாலை 6: 00 மணியளவில் சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து கலச ஸ்தாபனம் செய்து, சிறப்பு அபிஷேகம் நடந்தது.