முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா
ADDED :4549 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் வடகுச்சிபாளையம் முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா உற்சவம் நடந்தது.வடகுச்சிபாளையத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா உற்சவத்தை முன்னிட்டு கடந்த 16ம் தேதி முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. காலை 7 மணிக்கு எலுமிச்சை பழ கரகம், அக்னி சட்டியுடன் ஆலயத்திற்கு வந்தனர். காலை 10 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டி ஊசி போட்டு மஞ்சள் இடித்து பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்த அலகு குத்தும் நிகழ்ச்சி நடந்து . அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா வந்தார். விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் கமலி அய்யப்பன் தலைமையில் கிராமத்தினர் செய்திருந்தனர்.