உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாப்பாஞ்சாவடியில் கோவில் திருவிழா

பாப்பாஞ்சாவடியில் கோவில் திருவிழா

வானூர்: பாப்பான்சாவடி கிராமத்தில் சுந்தர விநாயகர், பாலமுருகன், கருமாரி அம்மனுக்கு திருவிழா நடந்தது.வானூர் ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அடுத்த பாப்பான்சாவடி கிராமத்தில் கருமாரி அம்மனுக்கு திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 20ம் மாலை 6 மணிக்கு சுந்தர விநாயகர், பாலமுருகன் சுவாமிக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. காலை 6 மணிக்குகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி, மதியம் அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடந்தது. 21ம் தேதி மாலை 5 மணிக்கு கருமாரி அம்மனுக்கு பக்தர்கள் அலகுபோட்டும், பூச்சட்டி ஏந்தி நேர்த்திகடன் செலுத்தனர். மாலை 7 மணிக்கு கருமாரி அம்மன், விநாயகர், பாலமுருகன் சாமிகள் அலங்கரிக்கப்பட்டு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !