ராஜவல்லிபுரம் தானப்பசுவாமி கோயிலில் இன்று வருஷாபிஷேகம்
ADDED :4548 days ago
திருநெல்வேலி: ராஜவல்லிபுரம் தானப்ப சுவாமி கோயிலில் இன்று (29ம் தேதி) வருஷாபிஷேகம் நடக்கிறது. நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை கோயில் அருகே உள்ள கார்காத்தார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தானப்பசுவாமி கோயிலில் இன்று (29ம் தேதி) வருஷாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 9.30 முதல் 11.30க்குள் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.