உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓலைக்குளம் வையாலிங்கம் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

ஓலைக்குளம் வையாலிங்கம் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

தேவர்குளம்: ஓலைக்குளம் வையாலிங்கம் சுவாமி, வைரவநாத சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கோவில்பட்டி தாலுகா கழுகுமலை அருகேயுள்ள ஓலைக்குளம் வையணாலிங்கம் சுவாமி, வைரவநாத சுவாமி கோயிலில் கடந்த 22ம் தேதி மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி துவங்கியது. அன்று மாலை 6.30 மணிக்கு மேல் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனலட்சுமி பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, பாலகா ஸ்தாபனம், எஜமான் வர்ணம், ஆச்சார்ய வர்ணம், கலா கர்ஷணம், யாகசாலை பூஜை, பூர்ணாகுதி நடந்தது. 23ம் தேதி காலை 7.35 மணிக்கு மேல் 9 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை வையாலிங்கம் சுவாமி, வைரவநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழாக் குழுவினர் மற்றும் ஓலைக்குளம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !