உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைஷ்ணவதேவி கோவிலில் தங்குமிடத்திற்கு அடிக்கல்!

வைஷ்ணவதேவி கோவிலில் தங்குமிடத்திற்கு அடிக்கல்!

ஜம்மு: நோயாளிகளுடன் வருபவர்கள் தங்குவதற்காக, ஜம்முவில், பிரமாண்ட தங்குமிடத்தை, வைஷ்ணவதேவி கோவில் வாரியம் கட்டுகிறது. ஜம்மு - காஷ்மீரின், ஜம்மு பகுதியில், பனி ‹ழ்ந்த மலை மேல் அமைந்துள்ள மாதா வைஷ்ணவதேவி கோவிலுக்கு வரும் பக்தர்கள், நோய்வாய்ப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க, ஜம்முவில் மருத்துவமனை உள்ளது. நோயாளிகளுடன் வருபவர்கள் தங்குவதற்காக, 240 படுக்கைகள் கொண்ட, நான்கு மாடிகளைக் கொண்ட தங்குமிடத்தையும் கட்டும் நடவடிக்கையில், வைஷ்ணவதேவி கோவில் நிர்வாகம் இறங்கி உள்ளது. கடந்த திங்களன்று, மாநில கவர்னர், ன்.என்.வோரா, இந்த தங்குமிடத்திற்கான அடிக்கல் நாட்டினார். தங்குமிடம், 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமையவுள்ளது இந்த வளாகம்; இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்; 4.91 கோடி ரூபாய் செலவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !