ஈரோடு ஆஞ்சநேயர் கோவிலில் குரு பெயர்ச்சி யாகம்!
ADDED :4543 days ago
ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடைமேடு ஆஞ்சநேயர் கோவிலில் குருபெயர்ச்சி யாகம் நடந்தது. ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு குரு பகவன், 28ம் தேதி காலை, 6.50க்கு இடம் பெயர்ந்தார். இதனை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, 6.30க்கு, ஈரோடு கள்ளுக்கடை மேடு ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில், கணபதி ஹோமத்துடன், குருபெயர்ச்சி யாகம் நடந்தது. இரவு, 9 மணிக்கு பூர்ணாகுதி, 9.10க்கு தட்சிணாமூர்த்திக்கு கலக அபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது. நேற்று காலை, 7.30க்கு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம், கட்டளை பூஜை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகி வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்திருந்தார். கோவில் பூசாரி, வேதவிற்பனர்கள் ஆகியோர் தலைமையில், குரு பெயர்ச்சி யாகம் நடந்தது.