திருப்பரங்குன்றம் கோயிலின் உப கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED :4542 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயில்களான சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில், மலைக்குப் போகும் பாதையில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோயில்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.இதற்காக, சொக்கநாதர் கோயிலில் ரூ.8.7 லட்சத்திலும், பழனி ஆண்டவர் கோயிலில் ரூ.15 லட்சத்திலும் திருப்பணிகள் நடந்தன.