மொரட்டாண்டியில் நவக்கிரக கோவிலில் குரு பெயர்ச்சி விழா!
                              ADDED :4540 days ago 
                            
                          
                          
புதுச்சேரி: மொரட்டாண்டி, நவக்கிரக கோவிலில், குரு பெயர்ச்சி விழா நடந்தது. குரு பகவானுக்கு, 1008 லிட்டர் பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.விழாவில், முதல்வரின் பாராளுமன்றசெயலர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மற்றும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை லலிதாம்பிகை வேத சிவாகம டிரஸ்ட் சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்திருந்தனர்.