உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் சதாசிவன் கோவில் கும்பாபிஷேக விழா

பேரூர் சதாசிவன் கோவில் கும்பாபிஷேக விழா

பேரூர்: பேரூர் அருகே, ராமசெட்டிபாளையத்தில், ஸ்ரீசதாசிவன் கோவில் கும்பாபி ஷேக விழா நேற்று நடந்தது.நேற்று அதிகாலை 4.00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை நடத்தப்பட்டு, கலசங்கள் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 6.15 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 9.30 மணிக்கு, கூனம்பட்டி திருமடம், வேதசிவாகம பாஸ்கர சிவாஜி தலைமையில் ஸ்ரீசதாசிவன், ஸ்ரீவேதநாயகி அம்மனுக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !