இங்கே அனுமதி யாருக்கு?
ADDED :4530 days ago
சொர்க்கலோகத்தை அமராவதி என்று அழைப்பர். இந்திரனும், இந்திராணியும் இந்த உலகை ஆட்சி செய்கின்றனர். சந்திரன், வாயு, வருணன், அக்னி போன்ற தேவர் களும் இங்கிருக்கின்றனர். யாகம் செய்தவர்கள், தீர்த்தயாத்திரை செல்பவர்கள், தானம், விரதம் மேற்கொள்பவர்கள் பிறவி முடிந்தபின் சொர்க்கத்தில் வாழ அனுமதிக்கப் படுவர். கற்பகவிருட்சம், ஐராவதம் யானை, உச்சிரவஸ் குதிரை, சயந்தம் என்னும் மண்டபம், நந்தவனம் என்னும் தோட்டம், காமதேனு, அமிர்தம், சிந்தாமணி என்பவை சொர்க்கத்தில் இருப்பதாகச் சொல்வர். மேனகா, ரம்பா, ஊர்வசி, திலோத்தமா என்னும் அப்சரஸ் பெண்களும் இங்கு வாழ்கின்றனர். நூறு அஸ்வமேதயாகம் நடத்தினால் ஒருவர் இந்திர பதவியையே அடைந்து விடலாம் என்கின்றன புராணங்கள்.